tamilnadu

img

”டெஸ்ட்”ஹாக்கி தொடர் : இந்திய ஆடவர் மற்றும் மகளிர் அணியினர் சாம்பியன் பட்டம்

ஒலிம்பிக் ”டெஸ்ட்”ஹாக்கி தொடரில் இந்திய ஆடவர் மற்றும் மகளிர் அணியினர் சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியுள்ளனர். 

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் அடுத்த ஆண்டு ஒலிம்பிக் போட்டி நடைபெற உள்ளது. இந்த ஒலிம்பிக்கான முன்னோட்டமாக ”டெஸ்ட்”  ஹாக்கி தொடர் ஜப்பான் மைதானத்தில் நடைபெற்றது.

இதனடிப்படையில் நடைபெற்ற ஹாக்கி ஆடவர் பிரிவு இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணியுடன் நேற்று மோதிய இந்தியா 5-0 என்ற கோல் கணக்கில் அபாரமாக வென்று சாம்பியன் பட்டத்தை வசப்படுத்தியது.

மகளிர் பிரிவு இறுதிப் ஆட்டத்தில் இந்தியா 2-1 என்ற கோல் கணக்கில் ஜப்பான் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது.ஒலிம்பிக் முன்னோட்ட தொடரில் சாம்பியன் பட்டம் வென்றதால் இந்திய ஹாக்கி அணி வீரர், வீராங்கனைகள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
 

;